Upcoming events

April 2026
Apr 05

புனித சந்தன மாதா பாடல்

singing-church

புனித சந்தன மாதாவை நோக்கி ஜெபம்

        இறையருள் நிறைந்த புனித சந்தன மாதாவே! கன்னி மரியாளின் எழில்மிகு ஒப்பற்ற தாயே! சந்தன மாதா ஆலயத்தில் வீற்றிருந்து உமது அன்பின் அருளால் அண்டி வரும் மக்களுக்கு இறைவனின் அருட்கொடைகளை வாரி வழங்கி வருகின்றீர். உமக்கே எங்கள் வணக்கமும் நன்றியும் உரித்தாகுக! தாயே இறைவனால் நீர் எவ்வளவோ நேசிக்கப்பட்டிருக்கிறீர். நீர் கேட்கும் மன்றாட்டை அவர் தர மறுப்பதில்லை என அறிந்திருக்கிற நாங்களும் உமது திருவடி அருகில் நிற்கின்றோம். இறைவனின் அருளை மிகுதியாக கொண்ட புனித சந்தன மாதாவே! நாங்கள் இறையருள் நிறைந்த இல்லத்தினராய் வாழ்ந்து நீர் வளம் பெற்ற மரம் போல் இவ்வுலக வாழ்விலே நற்கணி தந்து எங்களுக்கு இறைவன் தந்த மக்கள் செல்வங்களை நன்னெறியில் நடத்த அருள் புரியும். நாங்கள் அருளிலும் அறிவிலும் அன்பிலும் அமைதியிலும் வாழ்ந்து வளம் பெற செய்தருளும். உலக வாழ்க்கையிலே குறுக்கிடும் அனைத்து தீமையிலும் இருந்தும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்திட இறைவனிடம் பரிந்து பேசுவீராக தாயே ஆமென்! more…

pray-church

தேவாலய அமைப்புகள்


பங்கு நிர்வாகக்குழு

பல்லோட்டின் அருட்சகோதரிகள்

வின்சென்ட் தே பவுல் சபை

மரியாயின் சேனை

அன்பியக் குடும்பங்கள்

பலிபீடச்சிறார்கள்

இளையோர் மன்றம்

Scroll to Top